முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கேரளாவின் முத்தங்கா வனவிலங்கு சரணாலயமும், கர்நாடகத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் உள்ளது. தொடர்ச்சியாக அடர் வனப்பகுதி உள்ளதால் இது ஏராளமான வன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. இங்கு மான்கள், யானைகள், காட்டு எருமைகள் உள்ளிட்ட தாவர உண்ணி இனங்கள், பாலூட்டி இனங்கள் என ஏராளமாக காணப்படுகின்றன.
பொதுவாக இவை தங்களது உடலில் தாது உப்புக்கள், கனிமங்கள், வைட்டமின்களின் தேவைக்காக மண்ணில் உள்ள தாது உப்புக்களை இயற்கையாகவே தேடி சாப்பிடுவது வழக்கம். இதற்காக வனத் துறையினர் வனப்பகுதிகளில் வைட்டமின்கள், மினரல்கள் அடங்கிய உப்புக் கட்டிகளை போடுவது வழக்கம்.