நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே சேலாஸ் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் வீட்டிற்குள் பாம்பு புகுந்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த குன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வீட்டினுள் இருந்த 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை மீட்டு, காட்டேரியிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
குன்னூரில் வீடுகளுக்குள் புகுந்த பாம்புகளை மீட்ட தீயணைப்புத் துறையினர்!
நீலகிரி: குன்னூர் அருகே இருவேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த பாம்புகளை தீயணைப்புத் துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
firefighters-recover-snakes-from-homes-near-coonoor
அதேபோல் ஓட்டுப்பட்டறை பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் வீட்டிற்குள் பாம்பு புகுந்ததாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற குன்னூர் தீயணைப்பு வீரர்கள், வீட்டினுள் புகுந்திருந்த அரிய வகை சிவப்பு நிற பாம்பை மீட்டு, காட்டேரி வனப்பகுதியில் விட்டனர்.
இதையும் படிங்க:கரூர்; தேசிய நெடுஞ்சாலையில் மயில் உயிரிழப்பு!