தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் கொண்டாட சென்ற ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்

நீலகிரி: பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்ற ஓட்டுநர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

By

Published : Jan 17, 2020, 10:27 PM IST

padmanathan
padmanathan

நீலகிரி மாவட்டம் உதகை எழநெல்லி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்(40). இவர் அரசு ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு எழநெல்லி அருகேயுள்ள கடம்பராயன்பட்டி சாலையில் சொந்த தோட்டம் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி குடும்பம் மற்றும் உறவினர்களுடன் விடுமுறையை தோட்டத்தில் களிக்க இரண்டு நாட்களுக்கு முன்பு தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை தோட்டத்தில் உள்ள குளத்தில் பத்மநாதன், உறவினர்கள் சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக பத்மநாதன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.

இதனையடுத்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக அன்னவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் கூட்ட நெரிசல்: மயக்கமடைந்த பார்வையாளர் மரணம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details