நீலகிரி மாவட்டம் உதகையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சுரேஷ்பாபுவை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன தலைவர் கமல் ஹாசன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "ஒரு ஊழல் கட்சியை மாற்றி தமிழ்நாட்டை சீரமைப்பதற்கு இன்னொரு ஊழல் கட்சியைத் தேர்தெடுக்கக்கூடாது. ஏழ்மைக்கு மாற்று இலவசமாக இருக்க முடியாது. இலவசத்தை நம்பி பொருட்களை வாங்கினால் ஏழ்மை போகாது. அது உங்களை விட்டு அகலாது. வேலை செய்தால் ஊதியம் வரும் என்ற கட்டமைப்பு வேண்டும். அரசியல் மாற்றம் தேவை. ஏப்ரல் ஆறாம் தேதி மாற்றத்திற்கான விதையை நீங்கள் தூவ வேண்டும்" என்றார்.
இன்னொரு ஊழல் கட்சியை தேர்ந்தெடுக்காதீர்கள்- கமல்
நீலகரி: தமிழ்நாட்டை சீரமைப்பதற்கு ஒரு ஊழல் கட்சியை மாற்றி இன்னொரு ஊழல் கட்சியை தேர்தெடுக்கக் கூடாது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருமான வரித்துறை சோதனை செய்ய வேண்டிய இடத்தில் சோதனை செய்ய வேண்டும். பண புழகத்தை தடுத்தால்தான் நேர்மையான அரசியல் நிலவும். இங்கு இரண்டு வகையான சோதனை உண்டு. ஒன்று கடமையால் நடத்தப்படுவது, மற்றவை ஏவி விடப்படுவது. ஊடகங்கள் தேர்தல் கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்புகளை அரங்கேற்றுகிறது. திமுகவிற்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு போட்ட ஒரு பத்திரிகை மேல், வழக்குப்பதிவு போடுவதாக கூறி மிரட்டி வருகின்றனர்" எனக் கூறினார்.