நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக தேயிலை தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபகாலமாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இடையே கரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இதன் காரணமாக பல தேயிலை தோட்டங்களில் தேயிலை உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து கரோனா தடுப்பூசி
நீலகிரி: குன்னூரில் தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக குன்னூர், அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்படுகின்றன.
அந்த வகையில், குன்னூர் கிளண்டேல் உள்பட பல்வேறு தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து தடுப்பூசி போடப்பட்டது. இதனையடுத்து தொழிலாளர்கள் ஆர்வமுடன் தகுந்த இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.