நீலகிரி மாவட்டம் முழுவதும் மழைக்காலங்களில் சாலைகள், குடியிருப்புகள் அதிகம் சேதமடைந்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்த்தேக்க பகுதிகளில் உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஆறுகள் முறையாக துார்வாராமல், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தூர்வாரப்படாத ஆறு, குளங்கள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு
நீலகிரி: மழைக்காலங்களில் அதிகம் சேதம் ஏற்படுவதற்கு ஆறு, ஓடைகள் துார்வாராமல் இருப்பதுதான் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
nilgiri area river damaged
சமூக விரோதிகள் சிலர் ஆற்றுப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி வருவதாகவும், இதனை தடுக்க வேண்டிய நகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இவர்களுக்கு தடையில்லாத சான்றுகள் வழங்கி, மின்சாரம், குடிநீர் இணைப்புகளை வழங்கி பட்டாவும் வழங்க துணை போவதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, சமூக விரோதிகளுக்கு துணை போகும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.