நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக் குறைந்தது.
இயல்பு நிலைக்கு திரும்பிய குன்னூர்; அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை!
நீலகிரி: கடந்த சில நாட்களாக பெய்த கனமழை குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மழை நின்று மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவருகின்றனர். இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குன்னூர் சுற்றுலாத் தலங்களான டாலின்நோஸ், லாம்சிராக், காட்டேரி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் குன்னூர் சிம்ஸ் பூங்காவின் இரண்டாவது சீசனுக்காக இரண்டரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் சால்வியா, மெரி கோல்டு, பெக்கோனியா, ஃபிளாக்ஸ், பேன்சி உட்பட 60-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரிக்கக்கூடும் என சுற்றுலாத் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.