தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 25, 2021, 6:49 AM IST

ETV Bharat / state

களத்தில் இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்ட ஆட்சியர்!

நீலகிரி: உதகமண்டலத்தில் ஊரடங்கை மீறி ஏராளமான வாகனங்கள் குவிந்ததால் மாவட்ட ஆட்சியரே களத்தில் இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்டதுடன் வாகனங்களில் ஒட்டியிருந்த போலி ஸ்டிக்கர்களை அகற்றி, பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

களத்தில் இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்ட உதகை ஆட்சியர்
களத்தில் இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்ட உதகை ஆட்சியர்

தமிழ்நாட்டில் இன்று(மே24) முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் இல்லாத ஊரங்கு அமல்படுத்தபட்டுள்ளது. காய்கறி, பால் உள்பட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று ஊரடங்கை மீறி, அத்தியாவசியத் தேவைகளுக்குச் செல்லவதாகக் கூறி ஏராளமான வாகனங்கள் சாலையில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சிய ர் இன்னசென்ட் திவ்யா. நேரடியாக களத்தில் இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஏராளமானோர் அவசியமின்றி வாகனங்களில் வெளியே சுற்றியது தெரிய வந்தது. இதனால் வாகனங்களில் ஒட்டியிருந்த போலி ஸ்டிக்கர்களை அகற்ற கூறியதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

களத்தில் இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்ட உதகை ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் அத்தியாவசிய தேவையைத் தவிர வெளியில் வருவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனாவின் கோரப்பிடியில் குன்னூர்!

ABOUT THE AUTHOR

...view details