நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகள் 40 விழுக்காடு வனப்பகுதிகளாக உள்ளன. இங்கு யானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், கரடிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேலான வனவிலங்குகள் உள்ளன.
ஆண்டுதோறும் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் இந்தாண்டு அந்தப் பணி இன்று அதிகாலை தொடங்கியது. அந்தப் பணியில் கல்லூரி மாணவர்கள், வன ஊழியர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பினர் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் 15 குழுக்களாகப் பிரிந்து ஈடுபட்டுள்ளனர்.