நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. யானைகள் உணவு தேடி மக்கள் நடமாடும் பகுதிகளில் திரிவதால், விலங்கு மனித மோதல் ஏற்படுகிறது. அந்த வகையில், 4 நாட்களுக்கு முன் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிவனாண்டி என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று (ஜனவரி 28) மாலை ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சீபுரம் பகுதியில் தோட்ட காவலர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். அந்த பகுதியை சேர்ந்த நவ்ஷத் அலி என்பவரும் ஜமால் என்பவரும் நேற்றிரவு தோட்டத்தில் வழக்கம் போல காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த காட்டு யானை இருவரையும் கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் ஜமால் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில் நவசத் அலி சம்பவயிடத்திலேயே உயிர் இழந்தார். அதன்பின் ஜாமலின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் யானையை விரட்டினர். இதையடுத்து வனத்துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே அந்த பகுதி மக்கள் ஒரே மாதத்தில் 2 பேர் யானை தாக் உயிரிழந்துள்ளனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாக்க மாட்டோம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டது.
இதையும் படிங்க: போதைப்பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கலாம் - நீதிபதி புகழேந்தி