நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள அந்தோணியார் தேவாலயம் 134 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்தில் ஜூன் 2ஆம் தேதி கூட்டு திருப்பலி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இந்நிலையில், திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு, தேர்பவனி விமரிசையாக நடைபெற்றது.
130 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தின் தேர்பவனி
நீலகிரி: குன்னூரில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் தேவாலய தேர்பவனி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
church
இதில், உதகை மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.