தஞ்சாவூர்: அருகே கொல்லாங்கரை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவினை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று சொர்க்க வாசல் திறப்பில் கலந்துகொண்டு பெருமாள் சுவாமியை வழிபடுவது வழக்கம்.
இரவு நேரங்களில் பொதுமக்கள் கண்விழிக்க வேண்டும் என்பதால், அந்த இரவை பொழுது போக்குடன் கண்டுகளிக்க சரித்திர நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கொல்லாங்கரை கிராமத்தில் ஏகாதசியின் போது சரித்திர நாடகங்களான இராமாயணம், வள்ளி திருமணம், ருக்மாங்கதன், சத்தியவான் சாவித்திரி ஆகிய நாடகங்கள் நடத்தப்படுகின்றன.