திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் அகமது (70). இவருக்கு மெக்கா செல்வது என்பது தீராத ஆசையாக இருந்துவந்தது. இதையடுத்து அகமதிற்கு மெக்கா செல்ல வாய்ப்பு கிடைத்ததையடுத்து, கடந்த 10 தினங்களுக்கு முன்னதாக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். வாணியம்பாடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஒரு நாளைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் டெல்லி தூதரகத்திற்குச் செல்கிறார்.
இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் பகுதிக்கு வந்த அவருக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். இந்த வயதிலும் இவர் அதிக தூரம் இருசக்கர வாகனத்தில் செல்வதை இப்பகுதி மக்கள் வியந்து பாராட்டிவருகின்றனர்.