தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை மற்றும் ருத்திராட்சை மாலை அணிவித்த அர்ஜுன் சம்பத், கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, அர்ஜூன் சம்பத்தை கண்டித்து பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்த வகையில் அர்ஜூன் சம்பத்தை கண்டித்து திருச்சி அரசு பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.