தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் வணிகர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், வணிகர் சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி ஆகிய அனைத்து வணிகர்கள் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் கடந்த சில தினங்களாக திருக்காட்டுப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணத்தினால் அப்பகுதிகளில் உள்ள வணிக கடைகளை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 4 மணியுடன் மூட அனைத்து வணிகர்களின் சம்மதத்தின்பேரில் இந்த நடைமுறையை வரும் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.