தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலில் பலத்த காற்று: மீன்பிடிக்க செல்லாதாதல் மீன்வரத்து குறைவு!

தஞ்சை: கடல் பகுதியில் பலத்தகாற்று வீசிவருவதால் தஞ்சை மாவட்ட கடற்கரை மீன்பிடி தளங்களில் இருந்து பெரும்பாலன மீனவர்கள் கடலுக்குச்செல்லாததால் தற்போது மீன் வரத்து குறைந்துள்ளது.

thanjavur-fishers-didnt-go-to-fishing

By

Published : Sep 3, 2019, 4:59 PM IST

தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதியான அதிராம்பட்டினத்தைச்சேர்ந்த காத்தவராயன், அவருக்கு சொந்தமான படகில் அவர் மற்றும் அதே பகுதியைச்சேர்ந்த நான்கு மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் பலத்த காற்றின் காரணமாக எழுந்த உயரமான அலைகளால் காத்தவராயன் படகு கடலுக்குள் கவிழ்ந்தது.

இதனையடுத்து படகில் இருந்தவர்கள் கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.இதனைப் பார்த்த அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த சக மீனவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு கரை வந்து சேர்ந்தனர்.

வெறிச்சோடி காணப்பட்ட மீன்மார்க்கெட்

மேலும் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதால் தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதியில் உள்ள 37மீன் பிடி தளங்களிலிருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச்செல்லவில்லை.பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடந்த இரு தினங்களாக மீன் வரத்து குறைந்து உள்ளூர் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details