தஞ்சாவூர், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஒன்றியங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்
தஞ்சை மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வு!
தஞ்சாவூர்: தஞ்சாவூர், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஒன்றியங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வுசெய்தார்
இதில், திருவிடைமருதூர் ஒன்றியம் ஆடுதுறை பேரூராட்சியில் வறட்சி நிவாரண நிதியின் கீழ் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் ஆழ்துளை கிணறுகள், திருப்பனந்தாள் ஒன்றியம் கதிராமங்கலம் ஊராட்சியில் மணல்மேட்டு தெருவில் ரூ.26.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் சிறுபாலம், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பசுபதீஸ்வரர் கோயில் அகழி தூர்வாரப்படுவது என அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும் அந்த ஒன்றியங்களில் உள்ள மேல்நிலைப்பள்ளி, நியாய விலைக்கடை, பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி என சில இடங்களையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது திருவிடைமருதூர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் அசோக் குமார், வட்டார வளர்ச்சி அலுவர்கள் ராஜ்முருகன், வட்டாட்சியர் சிவக்குமார், தலைமை மருத்துவர் சுவாதிகா, நிலைய மருத்துவர்கள் சரவணன், மங்கையற்கரசி, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.