தஞ்சை பெரியகோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி இன்று அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்காக பக்தர்கள் ஆயிரம் கிலோ அரிசியும் 1000 காய் கனிகளையும் வழங்கியுள்ளனர்.
பக்தர்கள் வழங்கிய பச்சரிசி சாதம் தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அதன்பின் பலவகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பெருவுடையாருக்கு சாத்தப்பட்ட அன்னம் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.