தஞ்சை மாவட்டம் தாராசுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் ராமு (வயது 83) . இவர் நூலக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
முதியவர் தனது வீட்டின் வழியே சென்ற நான்காம் வகுப்பு பயிலும் ஒன்பது வயது சிறுமியை அழைத்து பிஸ்கெட் கொடுத்து பாலியல் வரம்பு மீறல் செய்ததாக சிறுமியின் பெற்றோர் நால்ரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.
இதையடுத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயாஇன்று முதியவரை தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.