தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மண்ணின் மைந்தர்களை புறக்கணிப்பதா? -பெ.மணியரசன்

திருச்சி: தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை இயற்ற வலியுறுத்தி மே 3ஆம் தேதி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு மறியல் போராட்டம் செய்ய இருப்பதாக தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன்

By

Published : May 1, 2019, 9:20 PM IST

ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் வேலைவாய்ப்பில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர் என தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அம்மக்களுக்கே 90 விழுக்காடு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதேபோன்று தமிழகத்திலும் சட்டம் இயற்றக்கோரி ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால் அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.

பெ.மணியரசன்

இந்நிலையில், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை இயற்ற வலியுறுத்தி வருகின்ற மே 3ஆம் தேதி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details