தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதில் நான்கு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் துப்புரவு பணிகளுக்காக தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
குடமுழுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை
தஞ்சாவூர்: பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆயிரத்து 280 துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-thanjavur
குடமுழுக்கு விழா முடிவடைந்த நிலையில், அதில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் ஆயிரத்து 280 பேருக்கு தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் பாராட்டு சான்றிதழுடன் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாயும் வழங்கி கௌரவித்தார். மேலும் அவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:எழில்மிகு தோற்றத்துடன் பிரமாண்டமாய் தயாராகும் தஞ்சை பெரிய கோயில்!