தஞ்சாவூர்: கும்பகோணம் சுவாமிமலையை அடுத்த திருவலஞ்சுழி கிராமத்தில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விநாயகர், அம்மன் உள்ளிட்ட ஆறு உலோக சிலைகள், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட உள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆறு ஐம்பொன் சிலைகளும் இராமலிங்கம் என்ற ஸ்தபதியிடமிருந்து இருந்து பறிமுதல் செய்யப்பட்டு சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆறு சிலைகளையும் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புடன் உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த உலோக சிலைகள் மீட்பு இந்த சிலைகளுக்கான உரிய ஆவணங்களை ஸ்தபதி நீதிமன்றத்தில் காட்டி பறிமுதல் செய்யப்பட்ட உலோக சிலைகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆடிபூரம் பிரம்மோற்சவம் கொடியேற்றம்