தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள சேண்டாகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரவேல்(72). இவர் நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஏஜென்ட் மூலம் மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
அங்கு ஏஜென்டால் ஏமாற்றப்பட்ட அவருக்கு வேலையும் கிடைக்காமல், பாஸ்போர்டின் கால அவகாசம் முடிவடைந்து சொந்த நாடு திரும்பவும் முடியாமல் தவித்துவருகிறார்.
இந்நிலையில், மலேசிய உலக மனிதம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி கமலநாதன், சித்திரவேலுவுக்கு உதவ முன்வந்துள்ளார். இதையடுத்து, கமலநாதனின் உதவியுடன் சித்திரவேல், நாடு திரும்ப உதவுமாறு இந்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை வீடியோவாக பதிவுசெய்து பிரத்யேகமாக நமது ஈடிவி பாரத்துக்கு அனுப்பியுள்ளனர்.
நாடு திரும்ப உதவுங்கள் முதியவர் உருக்கம் இதில், மத்திய அரசோ, வெளியுறவுத் துறை அமைச்சரோ உதவினால் சித்திரவேல் உடனடியாகநாடு திரும்ப முடியும் என கமலநாதன் கூறியுள்ளார். இவர்களின கோரிக்கைக்கு இந்திய அரசு செவிசாய்க்குமா?
இதையும் படிங்க:‘வெளிநாட்டில் வேலை... சொகுசு வாழ்க்கை’ ஆசைல மண்ணள்ளி போட்ட மோசடி ஏஜெண்ட்