தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளர்கள், மக்களுக்கு அமைச்சர்கள் நிவாரண உதவி!

தஞ்சாவூர்: ஊரடங்கால் வருவாயிழந்துள்ள சிகை திருத்துபவர்கள், சலவைத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

ஓட்டுநர்களுக்கு நிதியுதவி வழங்கிய அமைச்சர்!
ஓட்டுநர்களுக்கு நிதியுதவி வழங்கிய அமைச்சர்!

By

Published : May 18, 2020, 12:40 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் அதிமுக சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இதன்படி, சிகை திருத்தும் தொழில், சலவைத் தொழில், சமையல் தொழில் ஆகியவற்றில் ஈடுபடும் 100 பேருக்கு 600 ரூபாய் மதிப்பில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.

இதனுடன், ஆட்டோ, கார், வேன் ஓட்டும் தொழிலாளர்கள் 250 பேருக்கு நிவாரணமாக 500 ரூபாயை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

இதைப்போல், கோவை மாவட்டம் திப்பம்பட்டியில் ஆயிரம் குடும்பங்களுக்கு அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய 2 ஆயிரம் பைகளை நேரடியாகச் சென்று பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தகுந்த இடைவெளியுடன் வந்து மக்கள் பொருள்களைப் பெற்றுச் சென்றனர்.

இதையும் படிங்க: அகமதாபாத்தில் ஒரே வாரத்தில் அடையாளம் காணப்பட்ட 700 'சூப்பர் ஸ்பிரெடர்ஸ்'

ABOUT THE AUTHOR

...view details