கும்பகோணத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஆவின் பால் கொள்முதல், விற்பனை விலையை தற்போது தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. ஆவின் நிர்வாகத்தை முறைகேடு இல்லாமல் நடத்தினாலே பால் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது.
குடிமராமத்து பணிகளில் முறைகேடு: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!
தஞ்சாவூர்: கடந்த நான்கு ஆண்டுகளில் குடிமராமத்துப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 10 விழுக்காடு அளவிற்கான பணிகள் கூட நடைபெறவில்லை என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பால் விலை உயர்வு நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். தற்போது தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக குடிமராமத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 10 விழுக்காடு அளவிற்கு கூட பணிகள் ஏதும் நடைபெறவில்லை. குடிமராமத்து பணிகளில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் திட்டங்களான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை நடைமுறை படுத்த மாநில அரசு முயற்சிக்கிறது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தால் மட்டுமே இது போன்ற திட்டங்களின் மூலம் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க முடியும்’ என தெரிவித்தார்.