தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அஞ்சுகம் நகரில் உள்ள ஒரு வீட்டில் பாண்டி ஜூஸ் என்ற பெயரில் பாக்கெட் மூலம் சாராயம் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் சந்தேகப்படும்படியான அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெளிமாநில சாராயத்தை பாண்டி ஜூஸ் என பாக்கெட்டில் நிரப்பி விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
கும்பகோணத்தில் நூதன முறையில் சாராய விற்பனை - 750 லிட்டர் பறிமுதல்
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் பாக்கெட் ஜூஸ் என்ற பெயரில் நூதன முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து போலீசார் அங்கிருந்த 750 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததோடு, மயிலாடுதுறையைச் சேர்ந்த சின்னதுரை மகன் ராஜ் (40) அதே பகுதியைச் சேர்ந்த சேக் ரஃபிக் (37) வெளி மாநில சாராய பாக்கெட்டுகளை பேக்கிங் செய்துவந்த சாந்தா (40) செல்வி (40) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சாராய விற்பனைக்கு பயன்படுத்தி வந்த இரண்டு கார்கள் இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்பட சுமார் 7 லட்சம் மதிப்ப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.