தஞ்சை பெரிய கோயல் குடமுழுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனால் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தனி அலுவலகம் அமைக்கப்பட்டு ராஜா மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி ஆணையர் கிருஷ்ணன், கோவில் திருப்பணி
மற்றும் வழக்கு அதிகாரி நாடிமுத்து, காவலாளிகள் ராஜ்குமார், விஜய் ஆகியோர் பணி செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது கோயில் கும்பாபிஷேக
அலுவலகத்துக்கு வந்த ஹைதராபாத் தம்பதியினர், அங்கிருந்த ஓவியங்களை பார்த்து புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கோவில் காவலாளி ராஜ்குமார், அதிகாரி நாடிமுத்து ஆகியோர் இங்கு படம் எடுக்கக்கூடாது என கூறி அப்பெண்ணின் கேமராவை பறிக்க முயற்சித்ததாக கூறபடுகிறது. அது புகைபடம் எடுக்க முயன்ற பெண்ணிற்கு தவறாகத் தெரிய, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் கோயில் அதிகாரி நாடிமுத்து, ராஜ்குமார் ஆகியோர் தாக்கப்பட்டனர்.
தஞ்சை பெரிய கோயில் ஊழியர்களை தாக்கிய ஹைதராபாத் தம்பதியினர் கைது
தஞ்சாவூர்: கோயிலுக்குள் புகைப்படம் எடுத்ததை தட்டிக்கேட்ட தஞ்சை பெரியகோயில் ஊழியர்களை தாக்கிய ஹைதராபாத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நாடிமுத்து அணிந்திருந்த கண்ணாடி உடைந்தது. ராஜ்குமாருக்கு கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் உதவி ஆணையர் கிருஷ்ணனையும் அவர்கள் தாக்கினர். காயமடைந்த ராஜ்குமார் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு தகவல் தெரிவிக்க, அதன் பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்ட தம்பதியினரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் திருமலகிரியை சேர்ந்த சீனிவாஸ் என்ற சுந்தர்சர்மா, அவருடைய மனைவி மஞ்சு சுந்தர்சர்மா என்பது தெரிய வந்தது. சுந்தர்சர்மா, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . இந்த சம்பவம் குறித்து நாடிமுத்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தம்பதியினரை கைது செய்தனர்.