தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா சாகுபடி தொடங்கியுள்ளது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் பற்றாகுறையாக இருந்தது.
ரயில் மூலம் தஞ்சைக்கு வந்த உரங்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி!
தஞ்சாவூர்: விவசாயிகளுக்குத் தேவையான யூரியா, காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் தூத்துக்குடியிலிருந்து ரயில் மூலம் தஞ்சை கொண்டுவரப்பட்டுள்ளது.
உரங்கள்
இதையடுத்து, விவசாயிகளுக்குத் தேவையான ஆயிரத்து 27 டன் யூரியா, 255 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் தூத்துக்குடியிலிருந்து ரயில் மூலம் தஞ்சை கொண்டுவரப்பட்டுள்ளது.
அங்கிருந்து திருச்சி, திருவாரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் உரங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.