தஞ்சாவூர்: கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு கறுப்புக்கொடி ஏந்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில், புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று (ஜூன் 22) கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
’தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் வகையில், கர்நாடகாவில் ஆளும் பாஜக, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கிறது. அதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசும் துணை நிற்கிறது. இதற்கு ஏற்பவே, காவிரி ஆணையத்தின் தலைவரின் பேச்சும் நடவடிக்கையும் அமைந்துள்ளது. ஒன்றிய அரசு ஒருபோதும் புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது’ என வலியுறுத்தியும் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், தஞ்சை மாவட்ட துணை செயலாளர் என். கணேசன் தலைமையில், கைகளில் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 1000 பேருக்கும் மேல் உயிரிழப்பு