தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து கோயில்களிலும் தமிழில்தான் வழிபாடு நடத்த வேண்டும் - களஞ்சியம்

தஞ்சை: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் மொழியில்தான் வழிபாடு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும்காலங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாக இயக்குநரும் தமிழர் நலம் பேரியக்க தலைவருமான களஞ்சியம்  கூறியுள்ளார்.

By

Published : Feb 10, 2020, 11:59 AM IST

Director Kalachiyam latest press meet
Director Kalachiyam latest press meet

தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இயக்குநரும் தமிழர் நலம் பேரியக்க தலைவருமான களஞ்சியம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழக நிலத்தில் தமிழர் கட்டிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று சட்டப்போராட்டம் நடத்தப்பட்டு, இன்று பெருவுடையாருக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது நெகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழை ஒட்டுமொத்தமாக வழிபாட்டிலிருந்து விலக்கி வைத்திருந்த சூழலில், தமிழ் எழுச்சிபெற்று போராடி, இன்று கோபுர கலசத்தின் அருகே சிவனடியார்கள் தமிழில் குடமுழுக்கு செய்து இருப்பது உலகத் தமிழர்களுக்கு எல்லாம் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி.

இதற்காக தமிழ்நாடு அரசுக்கும் நீதித்துறைக்கும் தமிழர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இது ஒரு பகுதி வெற்றிதான், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் மொழியில்தான் வழிபாடு நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி வரும்காலங்களில் போராட்டம் நடத்துவோம். தமிழ்நாட்டில் வழிபாட்டு மொழியாக தமிழ் மட்டுமே இருக்க வேண்டும்" என்றார்.

இயக்குநர் களஞ்சியம் செய்தியாளர் சந்திப்பு

மேலும், தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது, தமிழ்நாடு மக்களுக்கு இது இனிப்பான செய்தி என்றார்.

இதையும் படிங்க: ‘பாதுகாகப்பட்ட வேளாண் மண்டலம்’ அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details