தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 11, 2020, 1:54 PM IST

ETV Bharat / state

கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? - பள்ளி மாணாக்கர் விழிப்புணர்வு

தஞ்சாவூர்: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வது குறித்து செயல்முறை விளக்கத்துடன் பள்ளி மாணாக்கர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்
விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

இதன்மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறிவருகின்றனர். மேலும், பல்வேறு பேரணிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

இந்நிலையில், பட்டுக்கோட்டை அருகில் உள்ள பயனீர் பள்ளியில் (PIONEER PUBLIC SCHOOL) கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மருத்துவர் பத்மநாதன் கலந்துகொண்டு, கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பது குறித்து விளக்கினார். இதையடுத்து பள்ளி மாணவர்கள் கொரோனா வைரஸ் போல் வேடமணிந்து செயல்முறை விளக்கம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: நீதிமன்றத்திற்கு முகக்கவசம் அணிந்து வந்ததால் பரபரப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details