தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் விவசாயி வைத்தியலிங்கம். இவர் கடந்த 31ஆம் தேதி உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, வைத்தியலிங்கத்தின் உடலை அவரது சொந்த ஊரான பொன்னமராவதிக்கு உறவினர்கள் எடுத்துச்சென்றனர்.
தஞ்சாவூரில் விவசாயி வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை!
தஞ்சாவூர்: வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், நான்கு பீரோக்களை உடைத்து 70 பவுன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளியை கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இறுதிச்சடங்குகள் முடிந்த நிலையில் வைத்தியலிங்கத்தின் மனைவி சரஸ்வதி நேற்றிரவு (நவ. 22) வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அதில், வீட்டிலிருந்த நான்கு பீரோக்களை உடைத்து 70 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி ஆகியவை திருடு போகியுள்ளது தெரியவந்துள்ளது.
தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் குற்றவாளிகளை தேடிவருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.