தமிழ்நாடு

tamil nadu

தஞ்சை பெரியகோயிலில் பெருவுடையாருக்கு 1000 கிலோ அன்னாபிஷேகம்

By

Published : Oct 31, 2020, 9:55 PM IST

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோயிலில் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான மக்கள் முகக்கவசம் அணிந்து தரிசனம் செய்தனர்.

thanjavur temple
thanjavur temple

தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் ஆலத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோன்று இந்தாண்டும் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரம் கிலோ அன்னம் மற்றும் கேரட், கத்திரிக்காய், வாழைப்பூ, பூசணி, முள்ளங்கி, பீட்ருட், வெண்டைக்காய், புடலங்காய் உள்ளிட்ட 500 கிலோ காய்கறிகளை கொண்டு பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்

அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்படும். இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:கட்டுபாடுகளுடன் பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details