தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறப்பிலும் இணைய பிரியா கணவன் - மனைவி!

தென்காசி அருகே கணவன் இறந்த செய்தி கேட்டு துக்கம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

husband
husband

By

Published : Apr 20, 2021, 9:48 PM IST

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குலசேகரன் கோட்டையை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி ஜி பாய். அரசு பள்ளியில் பணியாற்றி
ஓய்வு பெற்ற இந்த தம்பதி, சொந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று மகன்களுக்கும் திருமண ஆகி இருவர் வெளியூர்களில் வாழ்ந்து வருகின்றனர். மூத்த மகன் மட்டும் தாய், தந்தையுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 20) காலை திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சண்முக வேல் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் இருந்து உள்ளார்.மூத்த மகன் சண்முகவேலை எழுப்பமுயன்ற போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

உயிரிழந்த தம்பதி

இதுகுறித்து மகன் தாயரிடம் தெரிவித்த போது, அவர் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தார். அவரையும் எழுப்ப முயன்றபோது உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details