தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. முதற்கட்டமாக வெளிமாவட்ட, வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது உள்ளூர் மக்களும் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று உறுதிசெய்யப்பட்ட பகுதிகளை சுகாதாரப் பணியாளர்கள் கண்டறிந்து, தடுப்புகள் வைத்து பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 29) மாவட்டத்தில் 64 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் தொற்று எண்ணிக்கை 1,893ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 825 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கரோனா தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார், இதனால் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.