தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காய்கறி மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.
85 ரூபாய்க்கு காய்கறி தொகுப்பு பை - மாவட்ட ஆட்சியர்
தென்காசி: அன்றாட சமையலுக்கு தேவையான முக்கிய காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனையை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்.
இதற்கிடையில் தடை உத்தரவை பயன்படுத்தி வியாபாரிகள் அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதையடுத்து அரசின் உழவர் சந்தை மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறி தொகுப்பு பைகளை வழங்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி அன்றாட சமையலுக்கு தேவையான முக்கிய காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது தென்காசி ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள உழவர் சந்தையில் இதன் விற்பனையை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார். அப்போது வேளாண்மை இயக்குநர் முருகானந்தம் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.