தென்காசி:கடையநல்லூர் மங்களாபுரம் அருகே உள்ள தனிநபர் ஒருவருக்குச்சொந்தமான தோட்டத்தில் மனித உடலின் இடுப்புப்பகுதிக்குக் கீழ் உள்ள எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அதனைக் கைப்பற்றி அந்த மனித எலும்புக்கூடு யாருடையது என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து எலும்புக்கூட்டின் உடல் பாகங்கள், துண்டுகள் எதுவும் அப்பகுதியில் உள்ளனவா என்று காவல் துறையினர் தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், அதே பகுதியில் கை ஒன்று மட்டும் கிடந்துள்ளது. இதை ஏற்கெனவே காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது உடலின் பாதி எலும்புக்கூடு கிடைத்துள்ளது.