தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 13, 2022, 11:04 PM IST

ETV Bharat / state

வெறிநாய் கடித்து 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

புளியங்குடியில் வெறிநாய் கடித்து 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்பே இதுகுறித்து புளியங்குடி நகராட்சியிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வெறிநாய்
வெறிநாய்

தென்காசி:மாவட்டம் புளியங்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக வெறிநாய் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது பற்றி பொதுமக்கள் பலமுறை புளியங்குடி நகராட்சியிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் புளியங்குடி பகுதியில் 10க்கும் மேற்பட்ட நபர்களை வெறிநாய் கடித்ததால் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளி இன்று தொடங்கியதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு செல்லும் சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் புளியங்குடி நகராட்சியை கண்டித்து நகராட்சி முன்பு மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெறிநாய் தொல்லை காரணமாக புளியங்குடி பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் நடமாடுவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் வெறி நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:தர்மபுரி தேர் விபத்து... இரண்டு பேர் உயிரிழப்பு...!

ABOUT THE AUTHOR

...view details