தென்காசி: தென்காசி மாவட்டம், கீழபாறையடி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர், 'நியூ ரைஸ் ஆலயம்' என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அதிக வட்டி தருவதாகக் கூறி அப்பகுதி மக்களிடம் பணம் வசூலித்துள்ளார்.
அதிக வட்டி தருவதாகக்கூறி ரூ.3 கோடி மோசடி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தென்காசியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 3 கோடி ரூபாய் மோசடி செய்த நபரின் வீட்டை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
ஆனால், ஒரு வருடமாகியும் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆறுமுகசாமியின் வீட்டை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் பேசும்போது, "அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி, எங்கள் பகுதியைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் வீடுகளை அடகு வைத்த பணத்தையும், குழந்தைகளுக்காக வைத்திருந்த சேமிப்பு பணத்தையும் செலுத்தினோம். ஆறுமுகசாமி, எங்கள் பகுதியில் மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். வட்டி, அசல் இரண்டையும் திரும்பத் தரவில்லை. எங்கள் பணத்தை மீட்டுத்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினர்.
இதையும் படிங்க: 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தவறான புள்ளி விவரம்' - ஈபிஎஸ் குற்றச்சாட்டு