இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒருபுறம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரி செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதற்காக பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யவும், படிப்படியாக தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
தனியார் மயமாக்கப்படும் ரயில்வே துறை : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள்
தென்காசி : இந்திய ரயில்வே போக்குவரத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, செங்கோட்டை ரயில் நிலையம் முன்பு 100க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் தற்போது 150 வழித்தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில், தகுதி வாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கக்கோரி ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், மத்திய அரசு ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரயில் நிலையம் முன்பு ரயில் போக்குவரத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியைக் கண்டித்தும், ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தியும், சரக்குப் போக்குவரத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்தும் தென்காசி ரயில்வே கோட்ட சங்கத் தலைவர் ஷாபு தலைமையில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.