தென்காசி: திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் (39). இவர் குடும்பத்துடன் காலையில் பூப்பறிப்பதற்கு தோட்டத்திற்கு சென்று விட்டார். அப்போது அடையாளம் தெரியாத நபர் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த 12 பவுன் நகையை திருடி சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாரியம்மாள் பீரோல் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சேர்ந்தமரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். உடனே விரைந்து வந்த சேர்ந்தமரம் உதவி காவல் ஆய்வாளர் வேல்பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
பின்னர் வலசை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். சந்தேகமடைந்த காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த குருசாமி மகன் சுப்புராஜ் (45) என்பது தெரியவந்தது.