தென்காசி: சங்கரன்கோவில் தனியார் வங்கியில் பணிபுரியும் கோபிராஜ் என்பவர் தனது வங்கியிலிருந்து ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு கே.வி. ஆலங்குளம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து தாக்கி கீழே தள்ளி, அவரிடமிருந்த மொத்த பணத்தையும் திருடிச்சென்று விட்டனர்.
இதுபற்றி கோபிராஜ் சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சேர்ந்தமரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகின்றனர். மேலும் வீரசிகாமணி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அதிகம் உள்ளன.