தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது!

தென்காசி: சிவகிரி வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வன விலங்குகளை வேட்டையாட முயன்றவர்கள்

By

Published : Jun 12, 2020, 2:44 AM IST

தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியான ஆத்துவழி கிராம பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடிவருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனசரகர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் அங்கு தனியார் தோட்டத்தில் துப்பாக்கியுடன் வலம் வந்த ராமமூர்த்தி, அவரது மகன் செல்வகுமார், சூர்யபிரகாஷ், ஜெகன்நாதன் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலலித்ததால் அவர்களை சிவகிரி வனசரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நடத்திய விசாரணையில் அவர்கள் வனப்பகுதியில் துப்பாக்கி மூலம் மான், மிளா உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாட வந்ததை ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் வன உயிரின காப்பக சட்டப்படி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ததோடு, நான்கு பேருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் 4 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தனர்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டு காளையைத் துன்புறுத்தி உயிரிழக்கச் செய்த இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details