தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 22, 2020, 7:00 PM IST

ETV Bharat / state

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குற்றால அருவி வியாபாரிகள்!

தென்காசி: ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி குற்றால அருவி கடை வியாபாரிகள், வாழ்வாதாரம் இழந்து தவித்துவருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Courtallam Falls shopkeepers suffering from loss of livelihood
Courtallam Falls shopkeepers suffering from loss of livelihood

தென் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், நீர் வீழ்ச்சியாகவும் தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என இந்த மூன்று மாதங்களும் குற்றாலத்தில் சீசன் களைகட்டும்.

இந்த அருவிகளில் நீராட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. ஊரடங்கு காரணமாகவும் சுற்றுலா பயணிகள் வருகையின்றியும் குற்றாலத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனால் அங்குள்ள பழக்கடைகள், மூலிகை கடைகள், துணிக்கடைகள், வளையல் கடைகள் என 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக குற்றாலத்தில் கடை அமைத்து வியாபாரிகள் ஊரடங்கு காரணமாக தென்காசி-மதுரை சாலையோரமாக கடைகளை அமைத்துள்ளனர்.

இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் தற்போது போதிய வியாபாரம் இல்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:புகையிலை பொருள்கள் வீட்டில் விற்பனை - காவல் துறையினர் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details