தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

By

Published : Oct 14, 2020, 12:18 PM IST

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகள் அமைந்துள்ளன.

தென் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளை பொருத்தவரை ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும்.

இந்த சீசன் காலங்களில் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.

தற்போது கரோனா காலம் என்பதால், ஆறு மாதங்களாக, அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில், பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

மேலும் தொடர் சாரல் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் வெயில் தணிந்து, குளிர்ந்த இதமான சூழல் நிலவுகிறது.

இதையும் படிங்க: குண்டேரிப்பள்ளம் இயற்கை அழகை ரசிக்கும் பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details