தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டுக்குள் விட சென்ற கரடி தாக்கி வனத்துறையினர் இருவர் காயம்!

தென்காசி: களக்காடு முண்டந்துறை வனப்பகுதிக்குள் கரடியை விட சென்ற வனத்துறையினரை கரடி தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

v
காட்டுக்குள் விட சென்ற கரடி தாக்கி வனத்துறையினர் இருவர் காயம்!

By

Published : Jun 20, 2020, 2:34 PM IST

தென்காசி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்துகொண்டே உள்ளது. இந்நிலையில் கடையம் கடனாநதி வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திரவியம் என்பவர் தோட்டத்தில் புகுந்த கரடி வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது.

இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் பிடிபட்ட கரடியை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுவிட சென்றிருந்தனர். வனத்துறையினர் கூண்டின் கதவை திறந்து விட்டனர். வெளியே வந்த கரடி திடீரென வனத்துறையினர் இருந்த வாகனத்தையே தாக்கத் தொடங்கியது.

இதில் வனத்துறை கால்நடை மருத்துவர்கள் முத்துகிருஷ்ணன், மனோகரன் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். கரடியிடம் இருந்து தப்பிப்பதற்கு மேலே இருந்து விழுந்ததில் கால்நடை மருத்துவர் முத்துகிருஷ்ணனின் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

காட்டுக்குள் விட சென்ற கரடி தாக்கி வனத்துறையினர் இருவர் காயம்!

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் வன விலங்குகளை பிடிக்க, உயிரை பணையம் வைத்து வனத்திற்குள் கொண்டு விடும் வனத்துறையினருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்படுவதில்லை. கொடுக்கப்பட்டு இருந்தால் இதுபோன்ற தாக்குதல்களை அவர்கள் எதிர்கொள்ள வசதியாக இருக்கும். கூண்டில் இருந்து வெளி வந்த கரடி வனத்துறையினரை தாக்கும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

இதையும் படிங்க...கரோனாவால் கைதிகளின் கைவினைப்பொருள்கள் தயாரிக்கும் பணி நிறுத்தம்!

ABOUT THE AUTHOR

...view details