தமிழ்நாட்டில் முதல்முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் குடியிருப்பு பகுதியில் செயல்படுத்துவது இதுவே முதல் முறை என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார். இதன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் மக்கும் குப்பையை உரமாகவும், மக்கா குப்பையை மறுசுழற்சி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மக்கள் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்
சிவகங்கை: ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
Solid Waste Management Program
இதன் மூலம் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவது குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும்,இதில் உலக கபடி போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் பெற்றுத்தந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் தனராஜ்க்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் ஆட்சியர் ஜெயகாந்தன், காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித் நாதன் இந்திய கபடி வீரர் தனராஜ் மற்றும் அலுவலர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.