சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தைச் சேர்ந்த தம்பதி அசோக்குமார் (27) - சித்ரா தேவி. இருவரும் கீழக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றினர். இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. இத்தம்பதி ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்துவந்த நிலையில், இவர்களுக்குள் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சித்ரா தேவி, குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சித்ரா தேவியுடன் அசோக்குமார் ஃபோனில் நேற்று (மே 9) இரவு பேசினார். இதற்கு சித்ரா தேவி மறுத்ததாக தெரிகிறது.