தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சித்த மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை' - ஹெச். ராஜா வலியுறுத்தல்

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தனியார் சித்த மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்

ஹெச் ராஜா பேட்டி
ஹெச் ராஜா பேட்டி

By

Published : Jun 29, 2021, 1:23 PM IST

Updated : Jun 29, 2021, 2:52 PM IST

சிவகங்கை: காரைக்குடியில் நவீன வசதிகளுடன் கூடிய ஓம் மரபுவழி ஆயுஷ் மருத்துவமனையை ஹெச். ராஜா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மதுரை, திருப்பத்தூர் அரசு சித்த மருத்துவப் பிரிவு மருத்துவமனைகளில் கரோனா இறப்பு இல்லை.

எனவே நவீன வசதிகள் கொண்ட தனியார் சித்த மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். ஓம் மரபுவழி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பி. பிரின்சியின் முயற்சியில் அனைத்து நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை இங்கு அமையப்பெற்றுள்ளது.

பக்கவிளைவில்லா பாரம்பரியம்:

பட்டதாரி மருத்துவர்கள் , அனுபவமிக்க செவிலியர்கள், நவீன உபகரணங்களுடன் அனைத்து நோய்களுக்கும் சிறப்பான மருத்துவம் அளிக்க தயாராக உள்ளனர். பொதுமக்கள் நம் பாரம்பரிய மருத்துவ முறையை முயற்சித்துப் பார்த்தால் பக்கவிளைவுகள் இல்லாத நம் மருத்துவ முறையின் மகத்துவம் தெரியும்" என்று தெரிவித்தார்.

ஹெச் ராஜா பேட்டி

இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செ. வெங்கட கணபதி, மு.சுபாஷினி, நித்யா ரமேஷ் பாபு ஆகியோர் உடன் இருந்தனர். திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருத்துவமனையின் இயக்குநர்கள் ரா.கிரி கணேஷ் , ர. ராஜேஷ் குமார் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆனந்தையாவின் கரோனா மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி

Last Updated : Jun 29, 2021, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details