சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி, சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான குளம் கடந்த சில மாதங்களாக, பாசி படர்ந்து நீர் அசுத்தமான நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் பாண்டிச்சேரியை சேர்ந்த சிவனடியார் தன்னார்வ தொண்டு அமைப்பு குளத்தை தூர் வாரும் பணி ஈடுபட்டு வருகிறது. இன்று தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது குளத்தில் இருந்து இரண்டு அடி சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
கோயில் குளத்தை தூர்வாரும்போது இரண்டு அடி சிலை கண்டெடுப்பு!
சிவகங்கை: தேவகோட்டை அருகே உள்ள கோயில் குளத்தை தூர்வாரும் போது இரண்டு அடி சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து, கண்டதேவி கிராம நிர்வாக அலுவலர் ஆறாவயல் காவல் நிலையத்திற்கும், தகவல் தெரிவித்தார். சிலையை கைப்பற்றி சிலையின் தன்மை குறித்து, சிவகங்கை ஐடியல் விங் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது சிலை தேவகோட்டை வருவாய்த் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சிலை , சில ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் பொன்னகரம் திருவேங்க முடையான் கோவிலில் இருந்து காணாமல் போன சிலை எனவும் இதுகுறித்து, பொன்னகரம் காவல் நிலையத்தில் அப்போது புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.